Posts

SR: பிறந்தநாள் வாழ்த்து.!

Image
🪴🔅🪴🔅🪴🔅🪴 ச/அ: 155 'TVS' சுந்தரராஜன் பிறந்தநாள்... 25/11 ச/அ  அமைப்பின் வாழ்த்துகள். 🪴🔅🪴🔅🪴🔅🪴 * Through FB, he came to be known to us & immdtly extended help to SA (dt.13-02-2021). * Wrote 50 poems non-stop on both OVC, that is avlbl online & became highlight during ✨💯✨. * Written article, poems  also @ 📖💯. *  Has given half-page wish advt @ 💯📖 also. * Introduced his annan  to SA who also is a member now (184: AS. Govinda Rangarajan). * ⬆️  Both are ✨💯✨ Donors, a praiseworthy point here. * Keeps busy in several socio-welfare activities: orphanage, old-age homes, diff-abled homes. etc...etc... * Volunteer also: nxt 10th vizha: prize sponsorship + cert. print works / book purchase... Last but not least... * OVC HSS பள்ளிக்கு காரணகர்த்தா எனத்தகும் Advocate Rangasayee அவர்களின் கொள்ளுப் பேரன்...

TVS . SR: 25 years & some words of gratitude...

Image
காலந்தவறாமையையும், ஒழுக்கத்தையும் கற்றுக்கொடுத்த என் பள்ளி மானாமதுரை ஒ வெ செ மேல்நிலைப்பள்ளி சறுக்கலுக்கும் காரணம் இருக்கும் என  கனிவான அனுசரிப்போடு விசாரிக்கும் ஆசிரியை ஜெயா சின்னத் திறமை வெளிப்படுத்தலுக்கும் பரிசு அளித்து ஊக்கப்படுத்திய ஆசிரியர் ராமசாமி இயல்பாய்ப் பேசி மாதாந்திர தேர்வுக்கும்கூட ரொக்கப்பரிசு என  ஊக்கப்படுத்திய ஆசிரியர் சுகுமார் பாடம் தவிர்த்து தன் வாழ்வியல் நிகழ்வுகளை அனுபவிக்க, சிரிக்க சிரிக்க பகிர்ந்த ஆசிரியர் நாகராஜன் புரிந்து படித்தால் காலத்துக்கும் பயன்படும் என கணக்கு பதிவியலை நன்கு புரிய வைத்த ஆசிரியர் ரவிச்சந்திரன் -இப்படிப் பள்ளியில் படிக்கும் போது பயிற்றுவித்த ஆசிரியர்கள் எனக்குக் கொடுத்த பாடமும், அறிவுரையும், யோசனையும் தான்... இன்று செய்பணியில் நான் பணியில் இருக்கும் குளோபல் டி வி எஸ் நிறுவனத்தில்  25  ஆண்டு பணிக்காகப் பாராட்டுச் சான்றிதழ் பெற்றதற்கான அடிப்படை எனலாம்... TVS . SR: 25 years & some words of gratitude... On this eventful occasion  of my career,  crossing a notable moment,   I cordially cherish all...

முகப்பில்...

Image
 வணக்கம் வலைப்பதிவை பார்ப்பதற்கு முன் என்னுடைய சிறிய முன்னுரை... செய்பணிக்கு வந்த பின் கவிதைகள் எழுத ஆரம்பித்தவன். என்னுடைய கவிதைகள் 2002 லிருந்து 2003 வரை  கல்கண்டு, முத்தாரம், பாக்யா, தினமலர் வாரமலரில் வந்துள்ளன. அதன் பின்னே ஏறத்தாழ 17 ஆண்டுகள் எழுதவில்லை. மீண்டும் 2020-ல் எழுத ஆரம்பித்தேன். தற்செயலாய் ஒ வெ செ மேல் நிலைப்பள்ளியின் முகநூல் பக்கத்தின் என்  பின்னூட்டத்தை பார்த்துவிட்டு ஒருங்கிணைப்பாளர் ராஜூ தொடர்பு கொண்டு பள்ளி பற்றிய கவிதை எழுதச் சொன்னார். அவர் கொடுத்த ஊக்கத்தால் நூற்றாண்டு விழா மலர்க்கு 50 எழுதினேன். தனிப்புத்தகம் அந்த தருணத்தில் வர நான் முயற்சி செய்தேன்.  ராஜூவும் உதவினார். முடியவில்லை.  ஒ வெ செ ஆரம்பபள்ளி துவங்கப்பட்ட இந்நாளில் blogspot வெளியிட ராஜூ யோசனையில் 6 கவிதைகள் ஆரம்பப்பள்ளி கவிதையும் மேல்நிலைப்பள்ளியின் 44 கவிதையும் இணைத்து இந்த வலைதளத்தில் பார்க்கவும். படித்து தங்களின் கருத்தை கூறவும். கவிதை மட்டுமே என்னுடயது. வலை தளத்தில் பதிவு செய்து எங்கள் பள்ளியின் மூத்த ஆசிரியர் கிருஷ்ணன் துவக்க வைத்தது வரை அத்தனையும்.ராஜூதான். ஆசிரியர் கிருஷ்ண...

போதித்தவர்களுக்கு...

Image
'வகுப்பறைகளில்' பாடம் புரிய வைத்து ஆர்வம் தூண்டி உயர்கல்விக்கும் எதிர்காலத்துக்கும் திட்டமிட வைத்த கல்வி தாண்டி தனி மனித ஒழுக்கம் உடல் தூய்மை உள்ளத் தூய்மை சொல்லிக்கோடுத்த வகுப்பறைக்குள்ளேயே அறியாத தகவல்கள் உலக செய்திகள் கூறி வெளி உலகம் காண்பித்த போதித்தவர்களுக்கு வணக்கங்களும் நன்றிகளும்...  

கண்டுகொண்டேன்...

Image
சொல்லப்படுகின்ற விஷயங்கள் கேட்கப்பட 'சொல்லும் விதமும்' கேட்பவரின் 'முன்அனுமானமற்ற' திறந்த மன நிலையும்' வேறு சிந்தனைகளற்ற 'உற்று நோக்கும் பார்வையும்' சொல்வதை கேட்கும் ஆர்வமும் அவசியம் என்பதை கண்டு கொண்டேன் ஒ வெ செ பள்ளிகளில் ஆசிரியர்கள் பாடம் நடத்தும் போது...

பள்ளிக்காலத்து நிராசைகள்...

Image
ஒ வெ செ பள்ளியில் நிராசையான சில.. வரைபட ஆசிரியரிடத்தில் என் படத்திற்கு ஒரு தடவையாவது குறைந்த பட்சமாய் பரவாயில்லை காரணமாய் ஆர்வமின்மை... விளையாட்டு விழாவில் ஒரு விளையாட்டுக்காவது பரிசு காரணமாய் என்னிலும் திறமையானவர்கள்... ஆண்டு விழாவில் ஒரு நிகழ்விலாவது பங்களிப்பு காரணமாய் அளவுக்கு அதிகமான சபைக் கூச்சம்...  

பள்ளி காலத்து பின்நோக்கிய பார்வையில்...

Image
ஒ வெ செ பள்ளியில் படித்த காலத்து நினைவுகள் சில அந்த கணத்து உணர்வோடு... எனக்கு விடுமுறையாயும் பிற வகுப்புகளுக்கு தேர்வுமான ஓரு நாளில் தலைமை ஆசிரியர் கல்விக்கும் உதவித்தொகை தேர்வுக்குமான வழக்கமான விசாரிப்புக்காய் பள்ளி உதவியாளர்  மூலம் அழைக்க காரணம் அறியாமால் பதட்டத்தோடும் பயத்தோடும் அவர் முன் நின்ற தருணம்... எட்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் பள்ளி அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட முடிவு தெரிந்தது தான் என்றாலும் சகாக்களோடு ஓடிப்போய் பார்த்து மகிழ்ந்த தருணம்... பதினொராம் வகுப்பில் நான் கலைப்பிரிவை தெரிவு செய்ய நான் பத்தாம் வகுப்பில் வாங்கிய மத்திம மூன்னூறு மதிப்பெண்ணுக்கு ஆசிரியர்கள் கணக்குப்பிரிவையோ அறிவியல் பிரிவையோ தெரிவு செய்யத் தூண்டிய தருணம் ஆச்சாயர்த்துடன் ஏன் என்று புரியாமால் மலங்க மலங்க முழித்தபடி...